எனக்கெல்லாம் குழப்பமில்லை. தையா? சித்திரையா? என்பதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தானே! இனிப்பை எடுங்கள், கொண்டாடுங்கள்!
என்ன உள்ளேதான் சற்று இடிக்கின்றது! நம்ம ஊரு நிலவரம் சற்று கலவரமாக இருப்பது நிறையவே வருத்தம்தான். கரகாட்டக்காரன் காமடி போல நம்ம தமிழ் நாட்டு சுந்தரியை யார் வைத்திருக்கின்றார்கள் என்றே பிடிபடவில்லை.
12-ஆம் தேதி தேர்தல் நடந்திருந்தால் சனிக்கிழமை ஒரு பரபர IPL கிளைமாக்ஸ் பார்த்திருக்கிலாம். சீக்கிரம் ஆட்டை கலைந்திருக்கும். தேவையற்ற காத்திருத்தல்!
டெல்லி விவசாயிகள் போராட்டம் இன்றோடு முப்பதாம் நாள்! நியாயம் எதுவாக இருப்பினும் உச்சத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனிக்க கூடாதா? ஈகோ பார்க்கும் தருணமல்ல!
நாளொரு போராட்டம் பொழுதொரு மறியல் என்று வாழ்க்கை எக்கு தப்பாகத் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை சரியான ஒரு தலைமையின் வெற்றிடத்தையே காண்பிக்கிறது. யார் அதை நிரப்ப போகின்றார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
எது எப்படி இருப்பினும் திருவாளர் தமிழகத்தான் ஆகிய நாம் நம்பிக்கையாய் இந்த புது வருடத்தை எதிர்கொள்வோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!
அனைவருக்கும் இனிய ஹேவிளம்பி தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
No comments:
Post a Comment